பென்சிலுக்காக உடல் மெலிந்த ஜி.வி.!

GV hits gym

செய்திகள் 13-Feb-2014 10:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசை அமைப்பாளராக இருந்து, ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தையும் பெற்றவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவரது அடுத்த அவதாரம் நடிகன்! ‘பென்சில்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் களம் இறங்க இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்காக நிறையவே மெனக்கெடுகிறார். இயல்பாகவே ஒரு ‘ஸ்மார்ட் பாய்’ ஆக காட்சி அளிப்பவர் ஜி.வி.பிரகாஷ்! இப்படியிருக்க, ‘பென்சில்’ படத்தின் பள்ளி மாணவன் கேரக்டருக்காக மேலும் தன்னை ‘ட்ரிம்’ ஆக்க தினமும் ஜிம், உடற்பயிற்சி என்று உழைத்து தன் உடம்பை செதுக்கி வருகிறார்! 69 கிலோ எடை இருந்த ஜி.வி.பிரகாஷ்குமாரின் தற்போதைய எடை 60 கிலோவாம்! ‘பென்சில்’ படத்தில் ஜி.வி.க்கு ஜோடி ஸ்ரீதிவ்யா! மணிநாகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;