நயன்தாராவின் காதலர் தின கிஃப்ட்!

நயன்தாராவின் காதலர் தின கிஃப்ட்!

செய்திகள் 12-Feb-2014 4:41 PM IST VRC கருத்துக்கள்

நயன்தாராவை பொறுத்தவரையில் இந்த வருட காதலர் தினம் ஸ்பெஷல் தான்! அவர் உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடித்திருக்கும், ‘இது கதிர்வேலன் காதல்’ படம் காதலர் தினத்தன்று ரிலீசாகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கிட்டத்தட்ட 300 தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்தப் படம் தவிர நயன்தாரா நடித்திருக்கும் ஹிந்தி ‘கஹானி’யின் ரீ-மேக் ஆன ’நீ எங்கே என் அன்பே’ படத்தின் டிரைலரும் ஃபிப்ரவரி 14 அன்று ரிலீசாகிறது. தமிழ், தெங்லுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் படம் இது! இது தவிர சிம்புவுடன் நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் முதல் டீஸரை காதலர் தினத்தன்று வெளியிட இருக்கிறாராம் இயக்குனர் பாண்டிராஜ்!

நயன்தாரா நடித்துள்ள இந்த மூன்று படங்களின் வெளியீடுகள் அவரது ரசிகர்களுக்கு காதலர் தின ஸ்பெஷல் கிஃப்டாக அமைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;