விஜய்யை காப்பி அடித்த அக்ஷய்!

விஜய்யை காப்பி அடித்த அக்ஷய்!

செய்திகள் 12-Feb-2014 4:05 PM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2012ல் வெளிவந்த மாபெரும் வெற்றிப் படம் ‘துப்பாக்கி’. இப்படம் வசூலில் பல சாதனைகளை முறியடித்தது. இதனையடுத்து இப்படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை நாயகனாக்கி ‘ஹாலிடே’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த பாத்திரத்தில் ஹிந்தியில் சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கிறார். அதேபோல் ‘துப்பாக்கி’யில் வில்லன் கேரக்டரில் வித்யூத் ஜாம்வால் அசத்தலாக நடித்திருந்த கேரக்டரில், ஹிந்தியில் நடிகர் ஃப்ரெடி தருவாலா நடித்திருக்கிறார்.

பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘ஹாலிடே’ படத்தின் டிரைலர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பாலிவுட் ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த டிரைலரில் அக்ஷய்யின் நடிப்பு, ஆக்ஷன் என எல்லாமே வித்தியாசமாகத் தோன்ற, இப்படத்தின் டிரைலரைப் பார்த்த கோலிவுட் ரசிகர்கள் அனைவரும் முணுமுணுப்பது ‘விஜய்யை அப்படியே காப்பியடிச்சுருக்காரே அக்ஷய்’ என்பதுதான்.

‘துப்பாக்கி’ படத்தைப் பார்த்தவர்களுக்கு ‘ஹாலிடே’ படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது இந்த உணர்வு ஏற்படுவது நிச்சயம். ‘துப்பாக்கி’யின் முதல் டிரைலர் வெளியானபோது அதன் முடிவில் விஜய் ‘ஐயாம் வெயிட்டிங்...’ என்று சொல்வார். இந்த டயலாக் 2012ல் அதிகம் முணுமுணுக்கப்பட்ட பஞ்ச் டயலாக்காக மாறிப் போனது. தற்போது ‘ஹாலிடே’ படத்தின் டிரைலர் முடிவிலும் அக்ஷய்குமார் இதே பஞ்ச் டயலாக்கையே ரிப்பீட் செய்துள்ளார். இதுமட்டுமின்றி இந்த டிரைலரில் அக்ஷய் வரும் ஒவ்வொரு காட்சியும் அப்படியே ‘துப்பாக்கி’ விஜய்யை நினைவுபடுத்துவதுபோல் உள்ளது.

விஜய் ஹிந்தியில் நடிக்கவில்லையே என ஏங்கிய இளையதளபதி ரசிகர்கள், தற்போது ‘பாலிவுட் நடிகரையே தன்போல் இமிடேட் செய்ய வைத்துவிட்டாரே தளபதி’ என சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - செந்தூரா வீடியோ


;