இசையால் எதையும் வெல்லலாம்!

இசையால் எதையும் வெல்லலாம்!

செய்திகள் 12-Feb-2014 2:44 PM IST Sureshsugu கருத்துக்கள்

'கிளாசிக் சினி சர்க்யூட்' என்ற பட நிறுவனம் சார்பாக எம்.ஜெயக்குமார் எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'ஜமாய்'. சுமார் 28 வருடங்களுக்கு முன்பு இன்றைய தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர் தயாரித்து, ஆனந்த்பாபு நடித்து, 300 நாட்களுக்கு மேல் ஓடிய 'பாடும் வானம்பாடி' படத்தை இயக்கியவர் எம்.ஜெயக்குமார்.இவர் தற்போது இயக்கும் ‘ஜமாய்’ படத்தில் நவீன், உதய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

கதாநாயகிகளாக வைஜெயந்தி, நிவிஷா நடிக்கிறார்கள். மற்றும் ஆனந்த்பாபு, ராதாரவி, மனோபாலா,டி.பி.கஜேந்திரன், ராஜப்பா, மதன்பாப்,சீதா,சங்கீதா பாலன்,மாஸ்டர் மகேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். தினா இசை அமைக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை எம்.டி.சுகுமார் கவனிக்கிறார்.

இயக்குனர் எம்.ஜெயக்குமார் படம் குறித்து கூறும்போது, ‘‘இசை என்பது எவ்வளவு மென்மையான விஷயம். இசைக்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்தப் படத்தில் ஒரு இசைக் கலைஞன் மீது காதல் கொள்ளும் ஒரு இளம் பெண் தன் காதலில் ஜெயித்தாளா? இல்லையா என்பதை சொல்லி இருக்கிறோம்’’ என்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை,கேரளாவில் நடைபெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;