எம்.ஜி.ஆர்.பாடலில் ஜீவன்!

எம்.ஜி.ஆர்.பாடலில் ஜீவன்!

செய்திகள் 12-Feb-2014 2:15 PM IST VRC கருத்துக்கள்

பிரபல நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்தவர் வி.சுந்தர். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை இந்தியா முழுவதும் வெளியிட்டுள்ளார். இவர், ‘சன் மூன் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்திற்கு ‘தூதன்’ என்று பெயரிட்டுள்ளார். சில வருட இடைவெளிக்கு பிறகு ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரபல கன்னட நடிகை ஜெயமாலாவின் மகள் சௌந்தர்யா நடிக்கிறார்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் செல்வா. இவர் இயக்கும் 27 -ஆவது படம் இது. ஏற்கெனவே ஜீவன் - டைரக்டர் செல்வா இருவரும் இணைந்து நான் அவனில்லை - 1, 2 என இரண்டு பாகங்களை வெற்றிப் படங்களாகக் கொடுத்தவர்கள்.

இந்தப் படம் பற்றி இயக்குனர் செல்வா கூறும்போது,

“உன்னை அறிந்தால் – நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம் –
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ – வாழலாம்...

என்கிற எம்.ஜி.ஆர்.பாடி நடித்த பாடல் வரிகளேயே கதைக் களமாக்கி இருக்கிறேன் என்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ரங்கா பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். பா.விஜய், ஏக்நாத் எழுதியிருக்கும் பாடல்களுக்கு விஜய் இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;