கமலுக்கு 3 ஹீரோயின்கள்?

கமலுக்கு 3 ஹீரோயின்கள்?

செய்திகள் 12-Feb-2014 10:17 AM IST VRC கருத்துக்கள்

’விஸ்வரூபம் 2’ படத்தின் வேலைகள் முடிந்ததும், லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தை முதலில் கமல்ஹாசனே இயக்குவதாக பேசப்பட்டது. ஆனால் கமல் இயக்கவில்லை! கமல்ஹாசனின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ரமேஷ் அரவிந்த் ‘சதிலீலாவதி’ படத்தின் கன்னட ரீ-மேக் உட்பட பல படங்களை கன்னடத்தில் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் ரமேஷ் அரவிந்த், ‘உத்தம வில்லனை’ மாறுபட்ட ஒரு படமாக இயக்க திட்டமிட்டிருக்கிறாராம். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்களாம். இதற்காக காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. த்ரிஷா ஏற்கெனவே ‘மன்மதன் அம்பு’ படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் கமலுடன் நடிக்க கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பை தவறவிட மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. இதனால் இம்மூவரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிப்பார்கள என்றே கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு கமலுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய கிரேசி மோகன் வசனம் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 24-ஆம் தேதி பூஜையுடன் சென்னையில் துவங்கவிருக்கிறதாம்! இந்தப் படம் தவிர கமல்ஹாசன் மலையாள ‘திருசியம்’ படத்தின் ரீ-மேக்கிலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவகவிருப்பதாக கூறப்படுகிறது.

ஆக, இந்த வருடம் கமல்ஹாசன் நடிப்பில் மூன்று படங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - தாடிக்காரா ஆடியோ பாடல்


;