மை லைஃப் பார்ட்னர் – ஓரின காதலுக்கு ஆதரவான படமா?

மை லைஃப் பார்ட்னர் – ஓரின காதலுக்கு ஆதரவான படமா?

செய்திகள் 11-Feb-2014 3:30 PM IST VRC கருத்துக்கள்

டெல்லி உயர் நீதிமன்றம் ஓரின சேர்க்கையை தடை செய்துள்ள நிலையில், ஓரின காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘மை லைஃப் பார்ட்னர்’ என்ற மலையாள படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. மூன்று நண்பர்களின் கதையை சொல்லும் இந்தப் படத்தில் அமீர், சுதேவ் நாயர், அனுஸ்ரீ முதலானோருடன் சுகன்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த டிரைலரில் வரும் ஒரு காட்சியில் ஒரு இளைஞர், ‘’இரண்டு ஆண்கள் ஒன்றாக இருந்து சாப்பிடலாம், ஒன்றாக பயணம் செய்யலாம், ஒன்றாக மது அருந்தலாம்… ஆனால் ஒன்றாக வசித்தால்… ’கே’ என்கிறார்கள்! ஏன் இப்படி?’’ என்று வருகிறது அந்த வசனம்!

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் பத்மகுமார் படம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருப்பதில் ‘’இந்தப் படத்திற்கும் நீதிமன்ற தடைக்கும் எந்த சம்பதமுமில்லை. ஆனால் படத்தில் சமூகத்திற்கு தேவையான நல்ல ஒரு கருத்தை கூறி இருக்கிறேன்’’ என்கிறார்!

தீபாமேத்தா இயக்கத்தில் வெளிவந்த ‘ஃபயர்’, இஷா கோபிகர், அமிர்தா அரோரா இணைந்து நடித்த ‘கேர்ள் ஃப்ரெண்ட்’ போன்ற படங்களின் வரிசையில் இந்த படம் இடம் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பள்ளிப் பருவத்திலே - டிரைலர்


;