லிங்குசாமியிடம் பேசிய ரஜினிகாந்த்!

லிங்குசாமியிடம் பேசிய ரஜினிகாந்த்!

செய்திகள் 11-Feb-2014 2:13 PM IST VRC கருத்துக்கள்

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம் 'கோலி சோடா'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் லிங்குசாமியிடம் 'கோலிசோடா' படத்தைப் பற்றி தொலைபேசியில் பேசியுள்ளார்.

சுமார் 30 நிமிடங்கள் பேசிய ரஜினிகாந்த், ’கோலிசோடா’ படத்தை மக்கள் கூட்டம் அதிகம் உள்ள கோயம்பேடு பகுதியில் படமாக்கபட்டதை எண்ணி ஆச்சர்யப்பட்டு புகழ்ந்துள்ளதுடன் படத்தில் நடித்த சிறுவர்களையும் பாராட்டியுள்ளார். அத்துடன் 'கோலி சோடா' படத்தை இயக்கிய விஜய் மில்டனையும் தொடர்பு கொண்டு பாரட்டுக்களை தெரிவித்து அடுத்தாக அவர் இயக்கவுள்ள படத்திற்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இது குறித்து லிங்குசாமி, ‘‘திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த 'வழக்கு எண்18/9', 'கும்கி', 'கோலி சோடா' போன்ற படங்களை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியது பெருமையாக இருக்கிறது’’ என்கிறார் சந்தோஷத்துடன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;