கன்னட ரீ-மேக்கில் சித்தார்த்?

கன்னட ரீ-மேக்கில்  சித்தார்த்?

செய்திகள் 11-Feb-2014 1:02 PM IST VRC கருத்துக்கள்

’அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘வில்லா’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ பட நிறுவனம் தற்போது ராம் இயக்கத்தில் விஷ்ணு, நந்திதா நடிக்கும் ‘முண்டாசுபட்டி’ படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படம் தவிர,

நடிகர் அனுமோகனின் மகனும், இயக்குனர் கௌதம் மேனனின் உதவியாளருமான அருண் மோகன் இயக்கத்தில் நவீன் சந்திரா, சலோனி நடிக்கும் ‘சரபம்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்த இரண்டு படங்கள் தவிர, கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’லூசியா’ படத்தை சித்தார்த், தீபா சன்னிதி, நரேன் மற்றும் பலர் நடிக்க தமிழில் தயாரிக்கிறார்கள். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் ‘பீட்சா’ படத்தில் இணை இயக்குனராகப் பணிபுரிந்த பிரசாத் ராமர் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;