உலகப் புகழ்பெற்ற இயக்குனருடன் விஜய் சேதுபதி!

உலகப் புகழ்பெற்ற இயக்குனருடன் விஜய் சேதுபதி!

செய்திகள் 11-Feb-2014 11:37 AM IST VRC கருத்துக்கள்

ஒரே சமயத்தில் பல படங்களை கையில் வைத்துக் கொண்டு படு பிசியாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ’ரம்மி’ கொஞ்சம் ‘டம்மி’யான நிலையில், அடுத்து வந்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் வெற்றி அவருக்கு உற்சாக டானிக் ஆக அமைந்துள்ளது! அந்த உற்சாகத்தோடு சொந்தமாக தான் தயாரித்து நடிக்கும் ‘ஆரஞ்ச் மிட்டாய்’ படத்தின் வேலைகளிலும் படு பிசியாகி விட்டார் விஜய்சேதுபதி!

இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை பிரபல இயக்குனர் பிஜு விஸ்வநாத்திடம் வழங்கியிருக்கிறார்! பிஜு விஸ்வநாத் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், ஜப்பான், ஸ்பானிஷ் என பல மொழிகளிலாக பல படங்களை இயக்கி, உலக அளவில் நிறைய விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகப் புகழ்பெற்று விளங்கும் இயக்குனரான பிஜு விஸ்வநாத்துடன் விஜய் சேதுபதி இணைந்திருப்பதை பார்க்கும்போது ‘ஆரஞ்ச் மிட்டாய்’ படத்தை உலக அளவில் கொண்டு செல்ல திட்டமிட்டு, எடுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;