'நான் சிட்டியில் இருக்க லாயக்கா?’ - சூரி

'நான் சிட்டியில் இருக்க லாயக்கா?’  - சூரி

செய்திகள் 11-Feb-2014 11:26 AM IST VRC கருத்துக்கள்

மௌலி இயக்கத்தில், கமல் நடித்த 'பம்மல் கே சம்பந்தம்', 'நள தமயந்தி' ஆகிய இரண்டு படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர் சாக்ரட்டீஸ். இவர் தற்போது சசிகுமார், லாவண்யா திரிபாதி நடிப்பில் 'பிரம்மன்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி இயக்குனர் சாக்ரட்டீஸ் கூறும்போது,

‘'இதுவரை கிராமத்தை சேர்ந்த படித்த இளைஞனாக சினிமாவில் வலம் வந்த சசிகுமார் இப்படத்தில் பக்கா சிட்டி இளைஞனாக வந்து அசத்த உள்ளார்! டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் அவர்களின் நடன அமைப்பில் சசிகுமார் ஆடியுள்ள பாடல் காட்சிகளில் அனைவரின் பாராட்டையும் கண்டிப்பாக பெறுவார். இப்படத்தின் முதல் பாதியில் சந்தானம் விலேஜ் கெட்-அப்பிலும் இரண்டாவது பாதியில் சூரி சிட்டி கெட்-அப்பிலும் வந்து கலக்கி இருக்கின்றனர்’' என்றார்.

'பிரம்மன்' படம் தனக்கு வேறு ஒரு அடையாளத்தைக் கொடுக்கும்’ என சொல்லும் காமெடி நடிகர் சூரி தொடர்ந்து பேசுகையில், ‘‘இந்த படத்தில் எனக்கு இயக்குனர் சிட்டி கெட்-அப்னு சொல்லியபோது கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சு. என்ன சார் எனக்கு சிட்டி கெட்-அப் ஒத்து வருமா? சிட்டியில இருக்க நான் லாயக்கான்னு கேட்டேன். அதுக்கு இயக்குனர் சாக்ரட்டீஸ் நல்லா இருக்கும்-னு சொல்லி நடிக்க வைத்துள்ளார். படம் பார்த்தேன். என்னோட டைலாக் டெலிவரியை முழுதாக மாற்றிவிட்டார். வித்தியாசமா இருக்கு, நிச்சயமா வேறு ஒரு பெயரும் கிடைக்கும்னு நம்புகிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;