‘சினிமாவில் ஆங்கிலம் கலக்கலாம்!’ - கமல்

‘சினிமாவில் ஆங்கிலம் கலக்கலாம்!’ - கமல்

செய்திகள் 11-Feb-2014 10:52 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ராம் ‘தங்கமீன்கள்’ படத்திற்கு பிறகு இயக்கும் படம் ‘தரமணி’ இப்படத்தை ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன் தயாரிக்கிறது. வசந்த் ரவி, ஆன்ட்ரியா நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தில் ஆன்ட்ரியா எழுதி இசையமைத்து அவரே பாடியுள்ள தீம் பாடல் ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த விழாவில் பாரதிராஜாவும் கலந்து கொண்டார். விழாவில் கமல்ஹாசன் பேசும்போது,

‘‘இங்கே பாரதிராஜா பேசும்போது எனக்கும் அவருக்கும் 35 வருட பழக்க நட்பு என்றார். நட்பு என்று மட்டும் சொன்னால் பராவாயில்லை வருஷத்தை யாராவது கேட்டார்களா? நீங்கள் இயக்குனர் பேசி விடுவீர்கள். நான் நடிகன். இன்னமும் ஆன்ட்ரியாவுடன் ஆடிக்கொண்டிருக்கிறேன்’’ என்று சொல்ல அரங்கம் சிரிப்பிலும், கைதட்டல்களிலும் நிறைந்தது.

மேலும் கமல்ஹாசன் பேசும்போது, ’’சினிமாவில் ஆங்கிலம் கலப்பது ஒன்றும் தவறான விஷயமல்ல! உலகிலேயே ஆங்கிலமும் தமிழும் தான் எல்லா மொழிகளையும் தன்னுள் வைத்துள்ளது. தனித்தன்மையுடனும் இருந்து வருகிறது. சாதரணமா கிராமத்தில் பஸ்ஸு கிஸ்ஸு வருமா என்று கேட்பார்கள் அவர்களுக்கு பஸ்ஸு கிஸ்ஸு இரண்டுமே தமிழ்தான்! கிஸ்ஸை தவறாக பயண்படுத்துகிறார்கள். சினிமாவில் ஆங்கிலம் கலப்பதால் சினிமாவுக்கோ, தமிழுக்கோ பாதிப்பு இல்லை. இந்தப் பாடலை (ஆன்ட்ரியா தீம்) படத்தில் வைக்கலாம். தவறில்லை’’ என்றார்.

முன்னதாக திரையிடப்பட்ட பாடல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;