இயக்குனர்களை தயாரிப்பாளராக மாற்றும் பாண்டிராஜ்!

இயக்குனர்களை தயாரிப்பாளராக மாற்றும் பாண்டிராஜ்!

செய்திகள் 11-Feb-2014 10:51 AM IST VRC கருத்துக்கள்

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கோலி சோடா' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் பேசிய விஜய் மில்டன், ''இந்தப் படம் உருவானதற்கும் இதன் வெற்றிக்கும் முதல் காரணம் இயக்குனர் பாண்டிராஜ் தான்! மேலும் நான் தயாரிப்பாளர் ஆனதற்கும் அவரே காரணம்'' என்றார்.

பின்னர் பேசிய பான்டிராஜ், ''நான் எப்படி 'பசங்க' படத்தின் கதையை வைத்துகொண்டு பட வாய்ப்புக்காக சுற்றிக் கொண்டிருந்தேனோ அதே போல் விஜய் மில்டனும் சுற்றிக் கொண்டிருந்தார். எனக்கு ஒரு சசிகுமார் இருந்ததால் நான் வெற்றி பெற்றேன்.

அதே போல நான் இது மாதிரியான நல்ல கதைக்கு உதவி செய்யலேனா சினிமாவிலிருக்கிறதே வேஸ்ட். அதனால எறும்பு போல சிறிய உதவி செய்தேன். இந்தப் படத்தோட முழு வெற்றிக்கு காரணம் விஜய் மில்டன் தான் . என்னால் முடிந்த வரை சில இயக்குனர்களை தயாரிப்பாளர்களாகவும் மாறியுள்ளேன். ‘மூடர்கூடம்’ நவீன், தொடர்ந்து விஜய் மில்டன். அடுத்து சிம்பு தேவன், சீனுராமசாமி விரைவில் தயாரிப்பாளராக உள்ளனர்’’ என்றார். பாண்டிராஜ்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;