பிரபுதேவா V/S ஏ.ஆர்.முருகதாஸ்!

பிரபுதேவா V/S ஏ.ஆர்.முருகதாஸ்!

செய்திகள் 10-Feb-2014 5:18 PM IST VRC கருத்துக்கள்

பிரபுதேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கும் ஹிந்தி படம் ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஹாலிடே’ (துப்பாக்கி ரீ-மேக்). இந்த இரண்டு படங்களையும் ஜூன் 6-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் அதன் தயாரிப்பாளரகள்! ஆனால் இந்த இரண்டு படங்களும் ஒரே தினம் வெளியாகி மோதிக் கொள்வதை விரும்பவில்லையாம் அஜய் தேவ்கனும், அக்‌ஷய குமாரும்! ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது ரிலீஸ் தேதியில் பிடிவாதமாக இருக்கிறார்களாம்!

இந்த இரண்டு படங்களில் ஜூன் 6-ல் ரிலீஸ் என்று முதலில் அறிவித்தவர்கள் நாங்கள் தான் என்கிறார்கள் ‘ஹாலிடே’ பட தயாரிப்பாளர்கள்! ஆனால் அது தவறு என்கிறார் ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ பட ஹீரோ அஜய் தேவ்கன்! இதுபற்றி அவர் கூறும்போது,

‘’நாங்கள் மே 1- ஆம் தேதி ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தோம். அதை தொடர்ந்து, ‘ஹாலிடே’ படத்தையும் அதே தினம் வெளியிடுவதாக அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்தார்கள்! இதனால் நாங்கள் ‘ஹாலிடே’ தயாரிப்பாளர்களிடம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற சொன்னோம். ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தான் நாங்கள் ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 6-க்கு மாற்றினோம்! இது தான் உண்மை! ஆனால் இப்போது ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ பட ரிலீஸ் தேதியிலேயே ’ஹாலிடே’ படத்தையும் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்! இது எந்த வகையில் நியாயம்?’’ என்கிறார் அஜய் தேவ்கன்! பாலிவுட்டில் இந்த பிரச்சனை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - செந்தூரா வீடியோ


;