‘விஸ்வரூபம்-2’வில் அபிராமி?

‘விஸ்வரூபம்-2’வில் அபிராமி?

செய்திகள் 10-Feb-2014 2:26 PM IST VRC கருத்துக்கள்

‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹானுடன் ஜோடியாக நடித்த அபிராமி மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றியுள்ளார். அந்தப் படம், ‘விஸ்வரூபம் 2’. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா ஜோடியாக நடிக்க, அபிராமிக்கு என்ன கேரக்டர் என்கிறீர்களா? இதில் அபிராமி எந்த கேரக்டரிலும் நடிக்கவில்லை! மாறாக, பூஜா குமார் ஏற்று நடித்துள்ள கேரக்டருக்கு குரல் கொடுத்திருப்பவர் அபிராமி தானாம்!

கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அபிராமி ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டப்பிங் வேலைக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார்! டப்பிங் பேசி முடித்து அமெரிக்கா கிளம்ப இருந்த நேரத்தில் அபிராமிக்கு ஒரு மலையாள படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அந்தப் படம் சுரேஷ்கோபி ஹீரோவாக நடிக்கும் ‘அப்போத்திக்கிரி’. ஏற்கெனவே ‘பத்ரம்; என்ற படத்தில் சுரேஷ் கோபியுடன் ஜோடியாக நடித்துள்ள அபிராமி நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்கும் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;