ஆதரவற்ற குழந்தைகளுக்கு வீடு கட்டும் நடிகை!

ஆதரவற்ற குழந்தைகளுக்கு வீடு கட்டும் நடிகை!

செய்திகள் 10-Feb-2014 1:13 PM IST VRC கருத்துக்கள்

நடிகை ஹன்சிகா மோத்வானி சமூக சேவைகளிலும் ஆர்வம் கொண்டவர்! இவர், தனது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இப்போது இவர் பராமரிப்பில் 25 குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். இந்த குழந்தைகளுக்காக மும்பையில் ஒரு இல்லம் கட்ட முடிவு செய்திருக்கிறார் ஹன்சிகா! இதற்காக மும்பையின் முக்கியமான ஒரு இடத்தில் நிலம் வாங்கியுள்ளார் அவர்.

தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஹன்சிகா, தனது வருமானத்தின் ஒரு பகுதியை இந்த குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், வேறு சில சமூக சேவைகளுக்காகவும் செலவு செய்து வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி வரும், நல்ல உள்ளம் படைத்த ஹன்சிகா பாராட்டுக்குரியவர்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;