மீரா ஜாஸ்மின் திருமணம் எப்போது?

மீரா ஜாஸ்மின் திருமணம் எப்போது?

செய்திகள் 10-Feb-2014 2:00 PM IST RM கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ள மீரா ஜாஸ்மின், ஏராளமான மலையாள படங்களிலும் ஒரு சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் சிறந்த நடிகையருள் ஒருவராக திகழ்ந்து வரும் மீரா ஜாஸ்மினுக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில்ஜான் டைட்டஸ் என்பவருக்கும் ஒரு சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயமானது. சென்னையில் ’ஐடிஐ’ படித்தவர் அனில் ஜான் டைட்டஸ். இவர் தற்போது துபாயிலுள்ள பிரபலமான ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இரு வீட்டாரும் பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது திருமணம் நாளை மறுநாள் (12-2-14) திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது. மணமக்கள் இருவரும் கிறிஸ்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணம் கிறிஸ்துமத முறைப்படி நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யும் நிகழ்ச்சி நேற்று மீராஜாஸ்மின் வீட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஞ்ஞானி - டிரைலர்


;