லேகா வாஷிங்டனின் புதிய அவதாரம்!

லேகா வாஷிங்டனின் புதிய அவதாரம்!

செய்திகள் 10-Feb-2014 11:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெயம் கொண்டான்’, சமீபத்தில் ரிலீசான, ‘கல்யாண சமையல் சாதம்’ போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் லேகா வாஷிங்டன். தற்போது ஹிந்திப் படங்களில் நடித்து வரும் இவர், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் ஒரு படத்திலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மும்பையில் ஒரு விளம்பர கம்பெனியையும் நடத்தி வரும் லேகா வாஷிங்டன், விரைவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

அகமதாபாத்திலுள்ள ஒரு திரைப்பட கல்லூரியில் சினிமா இயக்கம் குறித்து 4 வருடங்கள் படித்தவர் லேகா வாஷிங்டன்! இந்த அனுபவத்தை வைத்து தான் இயக்கவிருக்கும் படம் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக அமையும் என்கிறார் லேகா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;