மறுப்பு தெரிவிக்கும் யுவன்ஷங்கர் ராஜா!

மறுப்பு தெரிவிக்கும் யுவன்ஷங்கர் ராஜா!

செய்திகள் 10-Feb-2014 10:18 AM IST VRC கருத்துக்கள்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரிப்பில் வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சமீபத்தில் ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில் வெளியான 'பிரியாணி' இவரின் 100வது படம்.

சினிமா வாழ்க்கையில் வெற்றிகரமாக வலம் வந்த இவரின் மணவாழ்க்கை சோகமானது! சுஜயா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். சிலகாலம் அவருடன் வாழ்ந்த பின், விவாகரத்து பெற்றார். அதன் பிறகு ஷில்பா என்ற பெண்ணை மணம் முடித்து, இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

நிம்மதியில்லாமல் இருந்து வந்த இவருக்கு நண்பர் ஒருவர் குர்ரான் புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்லியதாகவும் அன்றுமுதல் யுவனுக்கு உற்சாகமும் நிம்மதியும் பெற்றதாகவும் கூறப்படுகிறது. தினமும் 5 வேளை தொழுகை நடத்தி தீவிரமான முஸ்லீமாக மாறிவிட்டார் என்று சொல்லப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா தான் முஸ்லீம் மதத்துக்கு மாறிவிட்டதை குறிப்பிட்டிருப்பதோடு, தான் மூன்றாவது திருமணம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்

இவரின் தந்தை இளையராஜா ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாட்டை கொண்டவர்! தீவிர சிவ பக்தர் என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;