ஃபிப்ரவரி கடைசி தேதியில் கோச்சடையான்!

ஃபிப்ரவரி கடைசி தேதியில் கோச்சடையான்!

செய்திகள் 8-Feb-2014 5:09 PM IST VRC கருத்துக்கள்

ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’. இந்தப் படத்தின் வெளியீடு குறித்து ஏற்கெனவே பல தேதிகள் அறிவிக்கப்பட்டு, பிறகு அந்த தேதிகளில் படம் ரிலீஸாகாமல் ரசிகர்களை ஏமாற்றிவிட்டன! இப்போது ஒரு வழியாக ‘கோச்சடையான்’ படத்தை வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

‘கோச்சடையான்’ படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தின் மொத்த பாடல்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை குறித்து விட்டதால், படத்தின் ஆடியோவை உடனே வெளியிட வேண்டும் என்று அதற்கும் தேதி குறித்து விட்டார்கள்! லேட்டஸ்ட் தகவலின் படி ‘ ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ வருகிற 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் இதற்கான விழா நடைபெறவிருக்கிறது.

‘கோச்சடையான்’ படத்தை, ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யா அஸ்வின் இயக்கியிருக்க, ரஜினிகாந்துடன் ஷோபனா, தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஆதி முதலானோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். உலகம் முழுக்க இப்படம் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;