சாகசத்தில் ‘சுறு சுறு’ பிரசாந்த்!

சாகசத்தில் ‘சுறு சுறு’ பிரசாந்த்!

செய்திகள் 8-Feb-2014 1:28 PM IST VRC கருத்துக்கள்

’பொன்னர் சங்கர்’, ’மம்பட்டியான்’ படங்களை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் ‘சாகசம்’. இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். ‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’ படங்களில் கட்டுமஸ்தான முறுக்கு உடம்புடன் தோன்றி நடித்த பிரசாந்த், ‘சாகசம்’ படத்திற்காக 18 கிலோ எடையை குறைத்துள்ளார்!

தற்போது ‘ட்ரிம்’ ஆன உடம்போடு சுறு சுறுப்பான ஆசாமியாக காட்சியளிக்கும் பிரசாந்த் இந்தப் படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம்! ’சாகசம்’ படத்தினை புதுமுக இயக்குனர் அருண் ராஜ் வர்மா இயக்குகிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை பொறுப்பை மிலன் ஃபெர்னாண்டஸ் ஏற்றிருக்கிறார்.

பிரசாந்த் நடிக்கும் படங்கள் என்றால் அதில் நடிக்கும் ஹீரோயின்கள் பெரும்பாலும் பாப்புலரானவர்களாக இருப்பார்கள்! அதுமாதிரி இந்தப் படத்திலும் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்க பாப்புலரான ஒரு ஹீரோயினை தேடி வருகிறார் தியாகராஜன். இந்தப் படத்தின் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஃபிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;