ஷூட்டிங்கில் இணையும் தனுஷ் – அக்‌ஷரா!

ஷூட்டிங்கில் இணையும் தனுஷ் – அக்‌ஷரா!

செய்திகள் 8-Feb-2014 11:50 AM IST VRC கருத்துக்கள்

தனுஷ் முதன் முதலாக ஹிந்தியில் நடித்த ‘ரான்ஜனா’ படம் ஹிட் ஆனதை தொடர்ந்து அவருக்கு நிறைய பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன! ஆனால் நல்ல கதை வரும்போது நடிக்கலாம் என்றிருந்த தனுஷுக்கு ‘சீனி கம்’, ‘மா’ ஆகிய படங்களை இயக்கிய பால்கி சொன்ன ஒரு கதை பிடித்துபோக, அதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டார்.

இந்தப் படத்தில் பாலிவுட்டின் ‘பிக் பி’ அமிதாப்பச்சனும் நடிக்க, தனுஷுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷாரா நடிக்கிறார். பாலகி இயக்கிய ‘சீனி கம்’, ‘மா’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த இளையராஜாவே இந்தப் படத்திற்கும் இசை அமைக்க, பி.சி.ஸ்ரீராம ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்துகொள்கிறார் தனுஷு! இது குறித்து, ‘‘இன்று முதல் எனது இரண்டாவது ஹிந்திப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறேன்’’ என்று டுவீட் செய்திருக்கிறார் தனுஷ்! இந்தப் படத்தை ’ஏபிசிஎல்’ நிறுவனம் சார்பில் அபிஷேக் பச்சன் தயாரிக்கிறார். இந்தப் படத்தை வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸ் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;