‘ஜிகர்தண்டா’ டிரைலர்

‘ஜிகர்தண்டா’ டிரைலர்

விமர்சனம் 8-Feb-2014 10:39 AM IST Chandru கருத்துக்கள்

தன் முதல் படைப்பிலேயே தமிழ் ரசிகர்களை பயத்தால் விழிபிதுங்கச் செய்தவர் ‘பீட்சா’ கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தின் மூலம் விஜய்சேதுபதி என்ற ஹீரோவை அவர் பட்டை தீட்டி அனுப்ப, இப்போது வளர்ந்துவரும் ஹீரோவாக விஜய்சேதுபதி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

‘பீட்சா’வின் அதிரிபுதிரி வெற்றியால் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட அறிவிப்பான ‘ஜிகர்தண்டா’ வெளியானபோதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதோ... இப்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து இசை வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது ‘ஜிகர்தண்டா’. 2014ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியப் படங்களின் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டபோது, அதில் இடம் பிடித்த ஒரே தமிழ்ப்படம் இப்படம்தான். இத்தனை ப்ளஸ்களோடு விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் டீஸர்’ வெளியாகி இருக்கிறது. இந்த ‘ஜிகர்தண்டா’ டீஸரின் சுவை எப்படி..?

‘குரூப் கம்பெனி’ கதிரேசன் வழங்க, ‘ஸ்ரீ மீனாக்ஷி கிரியேஷன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் ‘ஜிகர்தண்டா’வின் டீஸர் மொத்தம் 1 நிமிடம் 4 வினாடிகள் ஓடுகிறது. டீஸரின் ஆரம்பத்தில் படத்தின் நாயகன் சித்தார்த் ஒரு பொட்டல் காட்டில் வந்து விழுகிறார். அடுத்த ஃபிரேமில் அவர் மண்டி போட்டு அமர, ‘ஜிகர்த்ணடா’ டைட்டில் திரையில் தோன்றுகிறது.

அந்த டைட்டிலுக்காகவே அதிகம் உழைத்திருப்பார்கள் என்பது அதைப் பார்த்தவுடன் தெரிகிறது. மிகவும் வித்தியாசமாக அதே சமயம் பட்டென மனதில் பதியும் வகையில் அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள் ‘ஜிகர்தண்டா’வின் டைட்டில் டிஸைனை. ‘பீட்சா’ டைட்டிலில் ‘நெகட்டிவ் ஸ்பேஸ்’ என்ற யுக்தியைப் பயன்படுத்தி நம்மைக் கவர்ந்ததைப் போல இந்த ‘ஜிகர்தண்டா’வும் ஏதோ ஒன்று நம்மை படம் பார்க்க அழைக்கிறது. ‘தண்டா’ என்பதை பெரிதாகப் போட்டு ‘ஜிகர்’ என்ற எழுத்துக்களை மேலிருந்து கீழாக சிறியதாக அடுக்கி வைத்து, அதன் மேல் ஒரு ‘ஸ்ட்ரா’ போட்டது போன்ற அமைப்பைக் கொடுத்துதிருக்கிறார்கள்.

டைட்டில் திரையில் தோன்றி மறைந்ததும், ஃபிரேமுக்குள் ஒரு ஜோடி கால்கள் நடந்து வர பின்னணியில் ஒரு ‘வில்லத்தனமான’ குரல் ஒன்று ‘ஜிகர்தண்டா’விற்கு விளக்கம் கொடுக்கிறது. ‘‘ஜிகர்னா ஹார்ட், தண்டான்னா ‘கோல்டு’ (குளிர்)... ‘கோல்டு ஹார்ட்’ அப்படினா ஈவு, இரக்கமே இல்லாததுன்னு அர்த்தம்... ஜிகர்தண்டா’’ என சொல்லிக் கொண்டே சித்தார்த்தின் மேல் ஒருவன் எதையோ ஊற்றுகிறான். முகத்தை கைகளால் துடைத்து சித்தார்த்து நிமிர்ந்த அவனைப் பார்க்க ‘கம்மிங் ஸூன்’ என போடப்பட்டு டீஸர் நிறைவு பெறுகிறது.

பின்னணி இசை மூலம் இந்த டீஸருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இந்த டீஸரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளின் ஒளிப்பதிவு ‘நச்’. மொத்தத்தில் ஒரு வித்தியாசமான ‘ஹாலிவுட்’ ஸ்டைல் டீசரைத் தந்து படம் பார்க்கும் ஆவலை அதிகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கார்திக் சுப்புராஜ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;