மகனுக்கு அடி பணிந்த இசைப்புயல்!

மகனுக்கு அடி பணிந்த இசைப்புயல்!

செய்திகள் 7-Feb-2014 3:42 PM IST VRC கருத்துக்கள்

பகலில் பணிகளை முடித்து, இரவில் ஓய்வெடுப்பதுதான் பெரும்பாலான மனிதர்களின் வழக்கம்! ஆனால் இதிலிருந்தெல்லாம் முற்றிலும் மாறுபட்டவர் நம்ம ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான்! ராக்கோழியான இவர் தனது இசைப் பணிகள் அனைத்தையும் இரவில்தான் வைத்துக்கொள்வார்! இரவில் இசை பணிகளை முடித்துவிட்டு பகலில் ஓய்வெடுப்பார்! இதுதான் பல ஆண்டுகளாக அவரிடம் இருந்து வரும் பழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு இரவு நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தன் வீட்டுடன் இணைந்துள்ள ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் தனது இசை கலைஞர்களுடன் இசைகோர்ப்பு வேலையில் ஈடுட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணி இருக்கும்! திடீரென்று ஸ்டுடியோவிற்குள் நுழைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன், ஏ.அர்.ரஹ்மான் மற்றும் அங்கிருந்த மியூசிக் என்ஜினீயரிடம் ‘ ‘எல்லா சுவிட்ச்களையும், கம்ப்யூட்டரையும் ஆஃப் செய்து விட்டு தூங்குங்கள்’ என்று கட்டளை இட்டிருக்கிறார்! மேலும் தனது தந்தையிடம், ‘தினமும் 7 மணி நேரமாவது தூங்கவேண்டும்’ என்றும் கூறி இருக்கிறார்!

இப்படி, அதிகாலை 3 மணிக்கெல்லம் ஸ்டுடியோவிற்கு வந்து கட்டளை போடுகிறானே இவன் என்று ஆச்சர்யப்படு போயிருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான்! இது குறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர்.ரஹமான், ‘‘நாம் எப்போதும் அவர்களை சின்ன குழந்தைகளாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்! ஆனால் அவர்கள் நமக்கு அறிவுரை கூறும் அள்விற்கு வளர்ந்து விட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதில்லை’’ என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை டீசர்


;