ஹீரோக்களை மிஞ்சும் நயன்தாரா!

ஹீரோக்களை மிஞ்சும் நயன்தாரா!

செய்திகள் 7-Feb-2014 1:15 PM IST VRC கருத்துக்கள்

எப்போதும் பரபரப்புக்கு பெயர் பெற்றவர் நயன்தாரா! ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடித்த படம் ‘ராஜா ராணி’. இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது! இதனை தொடர்ந்து அவர் அஜித்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் நல்ல வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தொடந்து உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படம், காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், பாண்டிராஜ் சிம்புவை வைத்து இயக்கும் படத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய பாண்டிராஜ், கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசி நயனை தனது படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக்கி இருக்கிறார்.

இப்படி படத்துக்கு படம் நயன்தாராவின் மார்க்கெட் வேல்யூ ஜெட் வேகம் பிடித்திருக்க, அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்திற்கும் நயன்தாராவிடம் பேசியிருக்கிறார்கள். இந்த படத்திற்காக அவருக்கு 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோக்களை எல்லாம் மிஞ்சும் வகையில் படத்துக்கு படம் சம்பளத்தை கூட்டிக்கொண்டு தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வரும் நயன் தாரா, தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு ஹீரோயினும் தொடாத ஒரு இடத்தை தொட்டிருக்கிறார்! இதற்கு முக்கிய காரணம் நயன்தாரா மீது ரசிகர்களுக்கு இருக்கும் மதிப்புதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இமைக்கா நொடிகள் - டீஸர்


;