அஜித்தின் ஆரம்பம் 100… வீரம் 25

அஜித்தின் ஆரம்பம் 100… வீரம் 25

செய்திகள் 7-Feb-2014 11:47 AM IST VRC கருத்துக்கள்

அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணி அமைத்து உருவாக்கிய ‘ஆரம்பம்’ படம் சென்ற அக்டோபர் 31-ஆம் வெளியானது! ரசிகர்களின் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி பெற்ற இப்படம் இப்போது 100-ஆவது நாளை எட்டியுள்ளது! ‘ஆரம்பம்’ படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே அஜித் நடிப்பில் வெளியான மற்றொரு படம் ‘வீரம்’.

பொங்கலையொட்டி சென்ற மாதம் 10-ஆம் தேதி வெளியான இந்தப் படமும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை 25 நாட்களை கடந்து வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் பெரிய கால இடைவெளியில் தான் ரிலீசாகும்! இந்நிலையில், அஜித் நடித்த இந்த இரண்டு படங்களும் குறுகிய கால இடைவெளியில் ரிலீசாகி வெற்றி பெற்று இன்னமும் ஓடிக்கொண்டிருப்பது தல ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷல் - பயம் பாடல் வீடியோ


;