உ’ உற்சாகம் குறைவு!

விமர்சனம் 7-Feb-2014 10:28 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களில் பலரை குப்பை மேட்டிலும் சிலரை கோபுரத்திலும் வைத்து அழகு பார்க்கும் கனவு தொழிற்சாலைகளின் (சினிமா) தலைமையிடமான கோடம்பாக்கத்தை பற்றிய கதை தான் ‘உ’. இங்கேதான் பலரின் கருக்கள் களவாடப்படுவதும் கலைந்து போவதும் அதிகம். மேலும் இன்னொருவரின் குழந்தைக்கு (க ற்பனை) நான் தான் அப்பா என கூச்சப்படாமல் உரிமை கொண்டாடுவதும் பிரபல்யம். சரி ‘உ’ கதைக்கு செல்வோம்.

தம்பி ராமய்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து இயக்குனர் வாய்ப்பு தேடுகிறார். இவர் நண்பர்களைவிட அதிக வயதுடையவர் குறைந்த திறமையுடையவர். அதிர்ஷ்டக்காற்று இவர் பக்கம் அதிகமாக வீச, கிடைக்கிறது இயக்குனர் வாய்ப்பு. ஆனால் இது மற்ற நண்பர்களுக்கு பிடிக்கவில்லை. ‘ரெட் ஒன் கேமரான்னு சொல்றாங்களே அது சிவப்பா இருக்குமா இல்லை கருப்பா இருக்குமா? என்றும் க்யூப்-ன்ன என்ன?’ என்றும் அவரை கிண்டல் செய்கின்றனர். அவமானத்தால் மனம் உடையும் தம்பி ராமய்யா சவால் விட்டு வெளியேறுகிறார்.

பல்வேறு சிறிய குற்றங்களுக்காக போலீஸ் ஸ்டேஷனில் சினிமா கனவுகளுடன் ஒன்று சேரும் இளைஞர்களின் நட்பு தம்பி ராமய்யாவுக்கு கிடைக்க அங்கே ஒரு டீம் உருவாகிறது. பிறகென்ன இன்டர்வெல் வரை கதை ரெடி பண்ணி தயாரிப்பாளரின் நன்மதிப்பை பெறுகிறார் தம்பி ராமய்யா. இதை அறிந்த அவரின் நண்பர்கள் புரொடக்‌ஷன் மேனேஜரின் உதவியுடன் தம்பி ராமய்யாவின் கதையை திருடி அந்தக் கதை தங்களுடையது என சொந்தம் கொண்டாட திட்டம் தீட்டுகின்றனர். என்ன நடந்தது என்பது மீதத் திரைக்கதையாக திரையில்.

உதவி இயக்குனர்கள் பற்றிய சினிமாக் கதை என்றவுடனே பத்துக்கு பத்து அறையில் பத்துக்கு மேற்பட்டோர் ஒருவர் சட்டையை இன்னொருவர் போட்டுக்கொள்வது, பல் விளக்க, டாய்லட் போக அடித்துக் கொள்வது, ஊரில் அம்மா படுத்த படுக்கை, தங்கை கல்யாணப் பிரச்சனை, செலவுக்கு பணம் கொடுக்கும் காதலி, உருகி உருகி காதலிப்பது போன்ற அருத பழசான ஃபார்முலாக்களை ஓரம் கட்டிவிட்டு படத்தை காமெடியாக ( பல இடங்களில் காமெடிக்கடி தவிர ) கொண்டு சென்றதற்கு அறிமுக இயக்குனர் ஆஷிக்கைப் பாராட்டலாம். தம்பி ராமய்யா ஒரு கம்பெனிக்கு சான்ஸ் கேட்க வரும்போது அங்கே இருக்கும் ஆஃபீஸ் பையன் அவரைப் பார்த்து ‘‘அடிமைப்பெண்’ படுத்துல அசிஸ்டென்டா இருந்துருப்பான் போல’ என்று சொல்லும்போதும், கவுண்டர் டைலாக் பிராக்டிஸ் பண்றேன் என அவ்வபோது தம்பிராமய்யாவை திட்டும்போதும் சிரிப்பு வருகிறது. இசையமைத்திருப்பவர் அபிஜித் ராமசாமி. ‘திக்கி தெனருது’ பாடல் கேட்கலாம் பார்க்கலாம். பாடி நடித்த சிறுவன் ஆஜித்தை பாராட்டலாம். மற்றபடி சொல்வதற்கில்லை. திரைக்கதையின் தொய்வு பெரிய சலிப்பை ஏற்படுத்துகிறது.

‘உ’ உற்சாகம் குறைவு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;