டெக்னீஷியன்களே நடிக்கும் படம்!

டெக்னீஷியன்களே நடிக்கும் படம்!

செய்திகள் 6-Feb-2014 4:17 PM IST RM கருத்துக்கள்

‘தமிழ்ப்படம்’ என்ற படத்தை தொடர்ந்து 'கள்ளப்படம்’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை மிஷ்கினின் உதவியாளர் வடிவேல் இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராமின் சிஷ்யர் ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கே இசை அமைக்கிறார். கௌகின் எடிட்டிங் கவனிக்கிறார். கூத்துக் கலையை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், எடிட்டர் என முக்கிய நான்கு பாத்திரங்கள் வருகிறது.

இதற்காக பலபேரை ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து பார்த்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு திடீர்னு ஒரு ஐடியா வந்திருக்கு! அந்த கேரக்டர்களில் படத்தின் நிஜ இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், எடிட்டரே நடித்தால் என்ன என்று! அப்புறம் என்ன, அந்த நால்வர் கூட்டணி தான் படத்தின் பின்னணியிலும், முன்னணியிலும் இருந்து ’கள்ளப்படம்’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்! ‘கள்ளப்படம்’ மூலம் நாங்கள் நடிகர்களாகவும் ஜெயிப்போம் என்கிறார்கள் இந்த நால்வர் கூட்டணி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;