அஜித்துக்கு தனுஷின் வில்லன்!

அஜித்துக்கு தனுஷின் வில்லன்!

செய்திகள் 6-Feb-2014 2:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் அஜித்-கௌதம் மேனன் படம் முக்கியமானது. விரைவில் இப்படத்திற்கான பூஜை நடைபெறவிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் ஸ்டைலிஷாக உருவாகவிருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக முதன் முறையாக அனுஷ்கா நடிக்கும் இப்படத்தில், அஜித்தை எதிர்ப்பதற்கு சரியான வில்லன் ஒருவரை தேடி வந்தார்கள். தற்போது, அந்த வில்லன் பாத்திரத்திற்கு நடிகர் கார்த்திக்கை தேர்வு செய்திருக்கிறார்களாம். இதுகுறித்த அறிவிப்பை இயக்குனர் கௌதம் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்திக். ஏற்கெனவே அஜித்தும் கார்த்திக்கும் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘ஆனந்தப் பூங்காற்றே’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆனால், இந்த இரண்டு படங்களிலும் இருவரும் ‘நட்பு’க்காக நடித்தார்கள். முதன்முறையாக அஜித்தை எதிர்க்கும் கேரக்டரில் கார்த்திக் நடிக்கவிருப்பதால், ‘தல’ ரசிகர்களுக்கு செமத்தியான விருந்து காத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;