கைவிட்ட பாலிவுட்! கை கொடுக்குமா கோலிவுட்?

கைவிட்ட பாலிவுட்!  கை கொடுக்குமா கோலிவுட்?

செய்திகள் 6-Feb-2014 12:49 PM IST VRC கருத்துக்கள்

கோலிவுட்டிலிருந்து, பாலிவுட்டுக்குச் சென்ற அசினை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது! பெரிய கனவுகளோடு பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கிய அசினால், பாலிவுட்டில் நிலையாண ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை! ஹிந்திப் படங்களில் நடிக்க துவங்கியதும், கொஞ்சம் கர்வத்துடன் தென்னிந்திய படங்களை தவிர்த்து வந்த அம்மணியிடம் இப்போது இருக்கும் ஒரே ஹிந்தி படம் ‘ஆல் ஈஸ் வெல்’ மட்டும்தான்! இந்தப் படத்தில் அபிஷேக் பச்சனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அசின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘கிலாடி 786’. சென்ற 2012-ல் வெளியான இந்தப் படத்தை தொடர்ந்து 2013-ல் இவர் நடிப்பில் எந்தப் படமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

தற்போது நடித்து வரும் ‘ஆல் ஈஸ் வெல்’ படம் வருகிற டிசம்பர் மாதம் தான் திரைக்கு வருமாம்! இதனால் வேறு எந்தப் படமும் கைவசம் இல்லாத அசின் மும்பையிலுள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறாராம். அத்துடன் மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி, தனக்கு தெரிந்தவர்களுக்கு தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாராம். ஆனால் அம்மணியை யாரும் கண்டு கொண்ட பாடில்லையாம்!

பெரிய கனவுகளோடு பாலிவுட்டுக்குச் சென்ற அசினுக்கு அங்கு தொடர்ந்து படங்கள் இல்லாத நிலையில் கோலிவுட் மீண்டும் வரவேற்பு கொடுக்குமா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;