நடிகர் கிருஷ்ணாவுக்கு புரமோஷன்!

நடிகர் கிருஷ்ணாவுக்கு புரமோஷன்!

செய்திகள் 6-Feb-2014 12:26 PM IST Chandru கருத்துக்கள்

‘கற்றது களவு’, ‘அலிபாபா’, ‘கழுகு’, ‘வானவராயன் வல்லவராயன்’ படங்களின் ஹீரோவும், இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பியும், தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகரின் மகனுமான நடிகர் கிருஷ்ணாவுக்கு இன்று காலை கோவை ஜெனீஸ் கிளப்பில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. கோவையைச் சேர்ந்த ரங்கநாதன்&வாசுகி தம்பதியின் மகள் கைவல்யாவை கரம் பிடித்திருக்கும் நடிகர் கிருஷ்ணாவின் திருமணத்தில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். கிருஷ்ணாவின் மனைவி கைவல்யா சாஃப்ட்வேர் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் திருமணத்தை அடுத்து, சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத வி.ஐ.பி.கள் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்த உள்ளனர்.

பேச்சிலர் பதவியிலிருந்து ஃபேமிலிமேன் பதவிக்கு புரமோஷன் பெற்றிருக்கும் நடிகர் கிருஷ்ணாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரா - டிரைலர்


;