மீண்டும் அவ்வை சண்முகி!

மீண்டும் அவ்வை சண்முகி!

செய்திகள் 6-Feb-2014 11:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூப்பர் ஹிட்டான ‘திருசியம்’ மலையாள படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீ-மேக் ஆகிறது! மலையாளத்தில் மோகன் லால் நடித்த கேரக்டரில் தமிழில் கமல்ஹாசன் நடிக்க, மீனா நடித்த கேரக்டரில் தமிழில் யார் நடிப்பார் என்ற கேள்வி இருந்து வந்தது! லேட்டஸ்டான தகவலின் படி தமிழிலும் அந்த கேரக்டரில் மீனாவே நடிக்கிறாராம்.

‘திருசியம்’ படத்தில் மோகன்லால் – மீனா ஜோடி 18 வயது, 12 வயது உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக நடித்திருப்பார்கள்! தமிழில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க பெரும்பாலான முன்னணி நடிகைகள் யோசிப்பார்கள் என்ற சூழ்நிலையில் அந்த கேரக்டரில் மீனாவே நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் ரீ-மேக் தரப்பினர்!

இதனால் தமிழ் வாய்ப்பும் மீனாவுக்கு கிடைத்துள்ளது. கமலும் மீனாவும் ஜோடி சேர்ந்து நடித்து ஹிட் ஆன படம், ‘அவ்வை சண்முகி’. இந்தப் படத்தைப் போல கமல் – மீனா மீண்டும் இணைந்து நடிக்கும் ’திருசியம்’ ரீ-மேக் பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;