சிக்ஸ் பேக் வைக்கும் அதர்வா!

சிக்ஸ் பேக் வைக்கும் அதர்வா!

செய்திகள் 6-Feb-2014 11:39 AM IST Chandru கருத்துக்கள்

‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தில் மாடர்ன் பையனாக நடித்து, ‘பரதேசி’ படத்தில் இயக்குனர் பாலாவால் பட்டை தீட்டப்பட்டவர் நடிகர் அதர்வா. தன் அப்பா முரளியின் அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், தனது தனித்துவமான நடிப்பினால் அறிமுகப் படங்களிலேயே தனக்கான தனி இடத்தைப் பெற்றுவிட்டார்.

தற்போது, ‘இரும்புக்குதிரை’ படத்தில் பைக் ரேஸராகவும், ‘ஈட்டி’ படத்தில் தடகள வீரராகவும், கேத்ரின் தெரஸாவுடன் இணைந்து ‘கணிதன்’ படத்திலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ‘ஈட்டி’ படத்தின் ஸ்போர்ட்ஸ் மேன் கேரக்டருக்காக தன் உடம்பை எஃகு போல் இறுக்கமாக்கி ‘6 பேக்ஸ்’ வைக்கிறாராம் அதர்வா. சூர்யா, விஷால், பரத் ஆகியோரைப்போல் அதர்வாவின் ‘சிக்ஸ் பேக்’ கெட்-அப்பும் பெரிதும் பேசப்படுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெமினி கணேசனும்சுருளி ராஜனும் - டிரைலர்


;