‘‘ப்ளீஸ்... விரட்டாதீர்கள்..!’’ - ஜனனி ஐயர்

‘‘ப்ளீஸ்... விரட்டாதீர்கள்..!’’ - ஜனனி ஐயர்

செய்திகள் 6-Feb-2014 10:49 AM IST Chandru கருத்துக்கள்

‘நாளைய இயக்குனர் சீசன்-2’ல் வெற்றி பெற்ற ரமேஷ் இயக்கும் படம் ‘தெகிடி’. துப்பறியும் நிபுணராக அஷோக் செல்வன் நடிக்க, இவரின் ஜோடியாக ஜனனி ஐயர் நடித்துள்ளார். ‘தெகிடி’ என்றால் சூது, ஆட்டம், பகடை என்று அர்த்தமாம். மர்மமான முறையில் ஒரு கொலையைப் பற்றி துப்பறியும் நாயகனுக்கு, பல்வேறுவிதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து அவர் எப்படி வெளிவருகிறார் என்பதுதான் கதையாம். சமீபகாலமாக காமெடிக் கதைகளாக வந்து கொண்டிருக்கும் சமயத்தில் இந்தப்படம் ஒரு புதிய டிரண்டை உருவாக்கும் என்பது இப்படத்தின் டிரைலரைப் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய ஜனனி ஐயர் ‘‘நான் மலையாளப் படங்களில் நடிப்பதற்காக சென்னையிலிருந்து கிளம்பிவிட்டேன். இனி தமிழில் கவனம் செலுத்த போவதில்லை என்று நான் கூறியதாக ஒரு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்படி எதுவும் இல்லை. ‘தெகிடி’ நான் நடிக்கும் 3வது தமிழ் படம். தொடர்ந்து தமிழில் நடிப்பேன். சென்னையில்தான் இருக்கிறேன். என்னை நீங்களே அனுப்பிவிடாதீர்கள்’’ என்று கெஞ்சலோடு கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ‘சூது கவ்வும்’ அசோக் செல்வன், தயாரிப்பாளர்கள் சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன், இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா, பாடலாசிரியர் குறிஞ்சி பிரபா, ஆகியோரும் பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர் 2


;