ரஜினி, கமல் இணையும் படம்!

ரஜினி, கமல் இணையும் படம்!

செய்திகள் 6-Feb-2014 10:49 AM IST VRC கருத்துக்கள்

அடிக்கடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்துபவர் நடிகை வனிதா விஜயகுமார்! அதுபோல் நேற்றும் அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்! ஆனால் நேற்று வந்தது தனது குடும்ப பிரச்சனைக்காக இல்லை! சொந்த தொழில் சம்பந்தமான பாதுகாப்பிற்கு! இது குறித்து அவர் கூறுகையில்,

‘‘வனிதா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் என் தந்தையும், தாயாரும் படக் கம்பெனி ஒன்றை ஏற்கெனவே தொடங்கி இருந்தனர். இந்த கம்பெனி மூலம் சிவாஜி, ரஜினி ஆகியோரை வைத்து படங்கள் தயாரித்தனர். அதன் பின் படத் தயாரிப்பை நிறுத்தி விட்டனர். நான் இப்போது அந்த படக் கம்பெனி சார்பில் படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இதற்கு என் தந்தை விஜயகுமாரும் அனுமதி கொடுத்துள்ளார். நான் தயாரிக்கப் போகும் படத்திற்கு ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்’ என்று பெயர் வைத்துள்ளேன். தமிழ்ப்பட உலகின் ஜாம்பவான்களின் பெயரில் இந்தப் படத்தை எடுப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

இந்தப் படத்தினை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இயக்குகிறார். நான் தயாரிப்பு மற்றும் இணை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு நடத்த போலீஸ் அனுமதி தேவைப்படுகிறது. அதனால் அது சம்பந்தமான மனு கொடுக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன். டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை நான் இன்னும் அதிகாரபூர்வமாக திருமணம் செய்யவில்லை. இப்போது குடும்ப பிரச்சனை வேண்டாம்! தொழில் பிரச்சனை பற்றி மட்டுமே பேசுவோம்’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;