வழக்கு தொடுத்த உதயநிதி!

வழக்கு தொடுத்த உதயநிதி!

செய்திகள் 5-Feb-2014 5:51 PM IST VRC கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு முதலில் வரிவிலக்கு அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து நீதிமன்றம் சென்ற பிறகே அப்படத்துக்கு வரிவிலக்கு கிடைத்தது. இப்போது அவர் தயாரித்து, நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திற்கும் வரிவிலக்கு கிடைக்காததால் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் அவர் அளித்துள்ள மனுவில்

''உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து எங்களது திரைப்படத்தை பார்வையிட்டு இது வரிவிலக்கு பெற தகுதியானதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் வரிவிலக்கு வழங்குவது குறித்து வணிக வரித்துறை கமிஷனர் தகுந்த முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வணிக வரித்துறை கமிஷனர் பதில் மனுதாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;