லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த அவதாரம்!

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த அவதாரம்!

செய்திகள் 5-Feb-2014 5:02 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, திலீப் போன்ற முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து 8 படங்களையும், தமிழில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஆரோகண்ம்’ மற்றும் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ ஆகிய படங்களையும் தயாரித்தவர் ஏ.வி.அனூப். இவர் மீண்டும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு தமிழ் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் பெயர், கதாநாயகன் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர். இதில் கதாநாயகியாக பியா நடிக்க, இன்னொரு முக்கிய கேரக்டரில் ’லூசியா’ என்ற கன்னட படத்தில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஒய்.ஜி.மகேந்திரன், ஏ.எல்.அழகப்பன் முதலானோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்தப் படத்திற்கு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய, மேட்லி - புளூஸ் இசை அமைக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) சென்னையில் துவங்கி கும்பகோணம், கோயம்பத்தூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருங்கி வா முத்தமிடாதே - கலிகாலம் வீடியோ சாங்


;