போலீஸை காதலிக்கும் தமன்னா!

போலீஸை காதலிக்கும் தமன்னா!

செய்திகள் 5-Feb-2014 3:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சீனு வைட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் தெலுங்கு படம், 'ஆகடு’. இந்தப் படத்தில் மகேஷ் பாபு, போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ‘வீரம்’ படத்தில் அஜித்துடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்த தமன்னா, தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் இது. இந்தப் படத்தில் தமன்னாவுக்கு குறிப்பிடும் படியான ஒரு கேரக்டராம்! அந்த கேரக்டர் என்ன என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்! கே.வி.குகன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் படு சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. வருகிற தசரா பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - சல்மார் வீடியோ சாங்


;