ஏ.ஆர்.ரஹ்மான் மீது சீனுராமசாமி தாக்கு!

ஏ.ஆர்.ரஹ்மான் மீது சீனுராமசாமி தாக்கு!

செய்திகள் 5-Feb-2014 3:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘தற்போதைய சினிமா உலகம் நேர்மையற்ற கலையுலகமாகக் காட்சியளிக்கிறது’’ என ‘தெகிடி’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பரபரப்பாக பேசியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது...

‘‘சினிமாவில் பெரிய நிறுவனங்கள்கூட சின்ன பட்ஜெட் படங்களைப் பத்தி கண்டுக்காமதான் இருக்கு. ஏவிஎம் உருண்டையே ரிஸ்க் எடுக்காமதான் சுத்திக்கிட்டிருக்கு. ஆனா, ‘அபி அன்ட் அபி’ நிறுவனம் ரிஸ்க் எடுத்து நிறைய சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரிக்கிறாங்க. அதேமாதிரி ‘தென்மேற்கு பருவக்காற்று’ங்கிற சின்ன படத்துல நடிச்ச விஜய் சேதுபதிதான் இன்னைக்கு தமிழ்சினிமாவுல பெரிய நடிகரா வளர்ந்துகிட்டிருக்காரு. சின்னப் படமான ‘பராசக்தி’ல அறிமுகமான சிவாஜிதான் மிகப்பெரிய ஜாம்பவானா மாறினாரு.

பெரிய மியூசிக் டைரக்டரை வச்சு சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்க முடியுறதில்லை. என் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை மியூசிக் பண்றதுக்கு எப்படி கூப்பிட முடியும்? என் படத்தோட பட்ஜெட்டே 2 கோடிக்குள்ளதான் இருக்கும். அதுல எப்படி அவருக்கு சம்பளம் கொடுக்கிறது. பெரிய இசையமைப்பாளர்கள் சின்ன பட்ஜெட் படங்களுக்கும் மியூசிக் பண்ணணும். இது நேர்மையற்ற கலையுலகமா இருக்கு.

இந்த ‘தெகிடி’ படத்தோட மியூசிக் டைரக்டர் நிவாசன் ரொம்ப அருமையா மியூசிக் பண்ணிருக்கார். கண்டிப்பா சினிமாவுல பெரிய ஆளா வருவாரு. ஆனா, அப்படி அவர் பெரிய ஆளா வளர்ந்தாலும் சின்ன பட்ஜெட் படங்களையும் மறக்காமல் இருக்கணும்’’ என்று பேசினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை டீசர்


;