ஸ்ரேயாவின் பிரம்மாண்ட படம்!

ஸ்ரேயாவின் பிரம்மாண்ட படம்!

செய்திகள் 5-Feb-2014 2:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஸ்ரேயா நடிக்கும் படம் ‘இராமானுஜர்’. ‘ஜாதி வேறுபாடற்ற சமுதாயம் எல்லா மதத்தினருக்கும் நற்கதி’ என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக போதித்தவர் ஸ்ரீராமானுஜர். மகானாக வாழ்ந்து மறைந்த அவரது வாழ்க்கை பதிவாக உருவாகி வரும் படமே ‘ஸ்ரீராமானுஜர்’. இந்தப் படத்தில் ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் நடிக்கிறார். டெல்லியை ஆண்ட பாதுஷாவின் மகளாக பீவி நாச்சியார் என்ற வேடத்தில் ஸ்ரேயா நடிக்கிறார்.

பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தை ரவி.வி.சந்தர் இயக்குகிறார். இந்தப் படத்தை ‘ஹைக்ரீவா சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.கிருஷ்ணன், பி.ஆர்.சேதுராமன் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்காக ஏவி.எம்.ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;