சசிகுமார் படத்தில் ஆன்ட்ரியா!

சசிகுமார் படத்தில் ஆன்ட்ரியா!

செய்திகள் 5-Feb-2014 12:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிருத்திவி ராஜுடன் ஆன்ட்ரியா நடித்துள்ள ’லண்டன் பிரிட்ஜ்’ மலையாள படம் சென்ற வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தமிழில் வெளியான ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்த ஆன்ட்ரியா அடுத்து ரொம்பவும் எதிர்பார்க்கும் படம் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’. இந்தப் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆன்ட்ரியாவுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறதாம். கமல் கூட ஒரு பாடல் காட்சி கூட உண்டாம்!

இந்தப் படங்கள் தவிர, சசிகுமார் நடிக்கும் ’பிரம்மன்’ படத்தில் ஒரு கவர்ச்சி நடனம் ஆட இருக்கிறார் ஆன்ட்ரியா! முதலில் நடனத்துக்கு மட்டுமே அழைக்கப்பட்ட ஆன்ட்ரியா, அந்த நடனத்துக்கான பாடலையும் நானே பாடுகிறேன் என்று கூறி இரண்டுக்கும் சேர்த்து பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டுள்ளார்! முதலில் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்த தயாரிப்பு தரப்பினர், அந்த நடனத்துக்கு ஆன்ட்ரியா தான் ரொம்பவும் பொருத்தமாக இருப்பார் என்ற இயக்குனரின் பிடிவாதத்துக்கு மதிப்பு கொடுத்து, ஆன்ட்ரியா கேட்ட சம்பளத்தை கொடுக்க முன் வந்திருக்கிறார்களாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;