‘‘அஜித் மனசு யாருக்கு வரும்’’ - கௌதம் மேனன்

 ‘‘அஜித் மனசு யாருக்கு வரும்’’ - கௌதம் மேனன்

செய்திகள் 5-Feb-2014 9:56 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடைசியாக கௌதம் மேனன் இயக்கிய ‘நீதானே என் பொன்வசந்தம்’ படமும் சரியாகப் போகவில்லை. தன் சொந்த பேனரான ‘ஃபோட்டோன் கதாஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்த படங்களும் பெரிதாக அவருக்கு உதவவில்லை. திடீர் வழக்குகள், முன்னணி நடிகர் ஒருவரின் பட வாய்ப்பு பறிபோனது என கௌதம் மேனனைச் சுற்றி ஒரே கருப்பு மேகமாக சூழ்ந்து கொண்டிருந்த வேளையில், அவரை அழைத்து ‘என் படத்தை நீங்கள் இயக்குங்கள்’ என அஜித் சொன்னதும்தான் கௌதமுக்கு கொஞ்சம் வெளிச்சமே தெரிய ஆரம்பித்தது.

ஏற்கெனவே ஒரு முறை அஜித்தும் கௌதம் மேனனும் இணைந்து படம் பண்ணுவதாக இருந்து, பின்னர் சில பிரச்சனைகளால் அப்படம் கைவிடப்பட்டது. அப்போது, ‘அஜித் எனக்கு தேவையில்லை’ என கௌதம் மேனன் முன்னணி பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளிக்க அது பெரும் பிரச்சனையாக அப்போது பேசப்பட்டது. ஆனால், இது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தக்க சமயத்தில் தானாகவே முன்வந்து தனக்கு படம் இயக்க வாய்ப்பளித்ததை பெருமையாக தற்போது சொல்லிக் கொண்டிருக்கிறார் கௌதம். இதுகுறித்து அவர்,

‘‘உண்மையைச் சொல்லணும்னா அஜித் எனக்கு பெரிய உதவி செஞ்சிருக்கார்... ‘வீரம்’ படம் முடிஞ்சதும் அவர் மூணு பெரிய டைரக்டர்களின் படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்திருக்கிறார். அதுல என்னோட பேர் இல்ல. ஆனா, என்னோட நிலைமை தெரிஞ்சுக்கிட்ட அவர்... ‘கௌதம் ஃபிரஷ்ஷா ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுங்க... எல்லாத்தையும் பாஸிட்டிவா மாத்திடுவோம்’ என அவர் சொன்னது நிச்சயம் மிகப்பெரிய விஷயம்’’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;