மனிதநேயத்திலும் ‘வித்தியாச’ பார்த்திபன்!

மனிதநேயத்திலும் ‘வித்தியாச’ பார்த்திபன்!

செய்திகள் 5-Feb-2014 10:04 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வித்தியாச’மாக எதையாவது செய்து பேர் வாங்குவதில் பார்த்திபனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை. சக நடிக, நடிகையரின் திருமணத்திற்கு பரிசளிக்க வேண்டுமென்றால் கூட அதிலும் ஏதாவது ஒரு புதுமையைப் புகுத்திக் கொண்டே இருப்பார். இவர் கொடுக்கும் பரிசுக்காகவே அவரின் வருகையை திருமணத்தில் எதிர்பார்ப்பவர்களும் உண்டு.

பரிசு கொடுப்பதில் மட்டுமல்ல மனிதநேயம் காட்டுவதிலும் அவர் ‘வித்தியாசமானவர்’தான் என்பதை சமீபத்திய அவரின் செயல் காட்டுகிறது. புற்றுநோய் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு முடிதானம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ஒன்றில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபனை, ‘அழகு போய்விடும்’ என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தங்கள் முடியை தானமாக கொடுத்த சில பெண்களின் செயல் ரொம்பவே பாதிக்க வைத்ததாம். இதனால், அந்த நிகழ்ச்சியிலேயே, புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 100 ‘விக்’ ஏற்பாடு செய்து தருவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

பார்த்திபனின் நல்ல மனம் வாழ்க!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டீசர்


;