ஆஹா கல்யாணம் முடிந்தது!

ஆஹா கல்யாணம் முடிந்தது!

செய்திகள் 4-Feb-2014 4:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நானி, வாணிகபூர் நடித்துள்ள படம் ' ஆஹா கல்யாணம். இத்திரைப் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு சென்னையில் இன்றுடன் முடிவடைந்தது . இப்படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்கியுள்ளார். நானி இப்படத்தை பற்றி பேசும் போது ' இந்தப் படமும் படப்பிடிப்பு நடந்த அந்த நாட்களும் என்னால் மறக்கவே முடியாதது. நாயகி வாணியுடன் பணியாற்றியதும், படத்தின் கல்யாண சம்பந்தமான காட்சிகளும் ஒரு கல்யாணம் போலவே இனிமையான அனுபவம். சமீபத்தில் அவருக்கு கிடைத்த film fare பத்திரிகையின் சிறந்த புது முகம் என்ற பெயரும் அவருக்கு தமிழ் ரசிகர்கள் இடையே நீங்கா இடம் கிடைக்கும் என நம்புகிறேன்.

இயக்குனர் கோகுல் கிருஷ்ணா , எனக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். தனக்கு என்ன வேண்டுமோ, அது கிடைக்கும் வரை அயராத அவரது உழைப்பும் நேர்த்தியும் அவரை மிக பெரிய இயக்குனராக அடையாளம் காட்டுகிறது என்றார்.

இப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;