காதல் பஞ்சாயத்து!

காதல் பஞ்சாயத்து!

செய்திகள் 4-Feb-2014 3:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெகோவா ஃபிலிம் இண்டர்நேஷனல்’ பட நிறுவனம் சார்பாக ஜோஸ்வா தேவதாஸ் தயாரிக்கும் படம் ‘காதல் பஞ்சாயத்து’. இந்தப் படத்தில் ரைட் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். மற்றும் சிங்கமுத்து, ரோபோ சங்கர், வடிவேல் பாலாஜி, வி.எஸ்,ராகவன், ராஜசேகர்,சார்மிளா,ஷகிலா, டைனோசர் ராஜன், வில்லனாக தேவராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் எழுதி, இயக்குபவர் கலைசங்கர் . படம் குறித்து இயக்குனர் கலைசங்கர் கூறும்போது, ‘‘இது முழுக்க முழுக்க காமெடி படம். கிராமத்தில் நடக்கும் காதல் பிரச்சனைகளுக்கு கட்டப் பஞ்சாயத்து செய்யும் கதாநாயகனின் மனதும் ஒரு காதலில் சிக்கிக் கொள்கிறது. அவர்களின் காதல் ஜெயித்ததா இல்லையா? என்பது கதை ! இதை எப்படியெல்லாம் நகைச்சுவையாக சொல்ல முடியுமோ அப்படி சொல்லி இருக்கிறோம்’’ என்கிறார் இயக்குனர் கலைசங்கர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பழைய வண்ணாரப்பேட்டை - டீசர்


;