காதல் சர்ச்சையில் டாப்சி!

காதல் சர்ச்சையில் டாப்சி!

செய்திகள் 4-Feb-2014 2:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆடுகளம்’ நாயகி டாப்சியும் காதலில் சிக்கியுள்ளாராம்! இவருடன் இணைத்து பேசப்படுபவர் டென்மார்க் நாட்டை சேர்ந்த பாட்மிட்டன் விளையாட்டு வீரர் மத்தியாஸ் போய்! ஹைதராபாத்தில் நடந்த ‘இந்திய பாட்மிட்டன் லீக்’கில் சந்தித்த இருவரும் நண்பர்களாகி, இப்போது அந்த நட்பு காதலாக மாறி இருக்கிறதாம்! டாப்சியை சந்திக்க மத்தியாஸ் அடிக்கடி டென்மார்க்கிலிருந்து மும்பைக்கு வருகிறாராம்.

அத்துடன் டாப்சி நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு லொகேஷனுக்கும் செல்கிறாராம்! டாப்சி நடிக்கும் ‘சாந்தி டாட் காம்’ என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சண்டிகட்டில் நடந்தது. அப்போது டாப்சியை பார்க்க மத்தியாஸ் அங்கு வந்திருந்தாராம்! இது சம்பந்தமாக வெளியான செய்திகளை மறுத்த டாப்சி, ‘மத்தியாஸ் என்னோட நண்பர் மட்டும்தான்! எங்களுக்குள் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை’’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்!

ஆனால் மத்தியாஸ் தன்னுடைய மைக்ரோ ப்ளாக் பக்கத்தில் டாப்சியுடன் தான் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை இணைத்து ‘‘டாப்சி என்னுடைய பியூட்டிஃபுல் கேர்ல் ஃப்ரெண்ட்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எய்தவன் - டிரைலர்


;