ரஜினியுடன் மோதும் வடிவேலு!

ரஜினியுடன் மோதும் வடிவேலு!

செய்திகள் 4-Feb-2014 12:52 PM IST Inian கருத்துக்கள்

அரசியல் சூறாவளியினால் சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்த ‘வைகைபுயல்’ வடிவேலு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்கும் படம் ‘ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’. இப்படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக மீனாக்ஷி தீக்ஷித் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகிவரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக வடிவேலுவின் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதே நாளில் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படமும் வெளியாகிறது. இதனால் இவ்விரு படங்களுக்கிடையே வியாபார போட்டி உருவாகியுள்ளது. சினிமா ரசிகர்கள் வடிவேலுவா? ரஜினியா? என பேசத் தொடங்கிவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயவன் - டீசர்


;