தமிழை தவிர்க்கும் ’மரியான்’ நாயகி!

தமிழை தவிர்க்கும் ’மரியான்’ நாயகி!

செய்திகள் 4-Feb-2014 12:51 PM IST VRC கருத்துக்கள்

’மரியான்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி மேனன். ’மரியான்’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்தப் படத்தில் தனுஷ் - பார்வதியின் பெர்ஃபார்மன்ஸ் ரொம்பவும் பேசப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் எந்தப் படத்திலும் கமிட் ஆகாத பார்வதி மேனன் தற்போது அஞ்சலி மேனன் இயக்கி வரும் ‘பெங்களூர் டேஸ்’ என்ற மலையாள படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான், ஃபஹத் ஃபாசில், நிவின் பாலி, நஸ்ரியா முதலானோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூரில் நடந்து வருகிறது. இந்தப் படம் தவிர ’எந்நு நின்டெ மொய்தீன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் பார்வதி மேனன். இந்தப் படம் கேரளாவில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை வைத்து எடுக்கப்படும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்


;