கோணாராக ராஜ்கிரண்!

கோணாராக ராஜ்கிரண்!

செய்திகள் 4-Feb-2014 11:05 AM IST Chandru கருத்துக்கள்

'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா அடுத்ததாக இயக்கியுள்ள படம் 'சிவப்பு'. இப்படத்தில் ‘கோணார்’ என்ற கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் ராஜ்கிரண். இவரின் கேரக்டர் படத்தில் மிக வலிமையான கேரக்டராக உருவாக்கப்பட்டுள்ளதாம். கட்டுமானத் தொழில் செய்து வரும் ராஜ்கிரண், இலங்கை அகதிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி அடைக்கலம் கொடுத்து வருகிறார்.

''அனாதரவா வந்தவங்களுக்கு ஆதரவு கொடுங்க... இல்லேன்னா முடியாதுன்னு சொல்லிடுங்க. அவங்களை வச்சு அரசியல் பண்ணாதிங்க!'' என்று ராஜ்கிரண் பேசும் வசனம் பிரபலமாகி வருகிறது. படத்தின் மையக் கருவும் இதுதானாம்!

நவீன்சந்திரா, ரூபாமஞ்சரி இருவரும் தத்தமது கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர் என்று ராஜ்கிரண் பாராட்டி வருகிறார். ‘‘ரூபாமஞ்சரி சிட்டி பெண்ணாக மட்டுமே நடிக்க முடியும்’’ என்றவர்களுக்கு இப்படம் தகுந்த பதில் சொல்லும் என்கிறார் ரூபாமஞ்சரி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;