காமெடிக்கு திரும்பும் கமல்!

காமெடிக்கு திரும்பும் கமல்!

செய்திகள் 4-Feb-2014 10:54 AM IST Chandru கருத்துக்கள்

‘விஸ்வரூபம் 2’ படம் முடியும் தருவாயில் இருப்பதால், தற்போது உலகநாயகனின் ரசிகர்கள் அவரின் அடுத்த படமான ‘உத்தம வில்லன்’ எப்படி இருக்கப் போகிறது என நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பவர் கமல்தான். படத்தை இயக்கப்போவது ரமேஷ் அரவிந்த்.

தற்போது ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் ஜிப்ரானே இப்படத்திற்கும் இசையமைக்கிறார். கமலின் குருநாதர் இயக்குனர் கே.பாலசந்தர் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார் கிரேஸி மோகன். வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தூங்காவனம் - மேக்கிங் வீடியோ


;